Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

GOA: பசுமை மண்டலத்தில் கட்டடங்கள்… சட்டத்திருத்ததால் பயனடைந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் | ஷாக்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in அரசியல் செய்திகள்
0
GOA: பசுமை மண்டலத்தில் கட்டடங்கள்… சட்டத்திருத்ததால் பயனடைந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் | ஷாக்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பில்டர்கள், தொழிலதிபர்கள், பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தங்களது விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆவணங்களில் திருத்தம் செய்து அதில் கட்டடங்கள் கட்டுகின்றனர். அல்லது அதனை அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள நிலம் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாழ்வான மலையைக்கூட முன்பு குடியிருப்பு பகுதியாக இருந்தது என்றும், அதில் தவறுதலாக பசுமை பகுதி என்று அறிவித்துவிட்டனர் என்றும், அதனை திருத்தி கொடுக்கும்படி கூறி குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக்கொள்கின்றன்ர். இதற்கு 500 முதல் 50000 ரூபாய் வரை இடத்திற்கு தக்கபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்துடன் நகர திட்டமிடுதல் துறையில் நில ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து அறிக்கை கொடுப்பர்.

அந்த அறிக்கை உயர்மட்டக்கமிட்டிக்கு செல்லும். அக்கமிட்டியின் பரிந்துரைப்படி நகர் திட்டமிடுதல் கமிஷனர் நிலத்திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிடுவார். கோவா வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பகுதி என்பதால் கட்டுமானங்கள் கட்டுவதற்கு அதிக அளவில் நிலம் தேவையாக இருக்கிறது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் குளோடே ஆர்வரிஸ் கூறுகையில், “மலையின் தாழ்வான பகுதியில் கணக்கெடுப்பு நடக்கும் போது எப்படி தவறு நடந்திருக்க வாய்ப்பு இருக்க முடியும்?. இதன் மூலம் மலையின் சரிவான பகுதி, வயல்கள், பசுமைப்பகுதிகளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள் அழித்துவிடுவர். நீர்நிலைகள், மலைகள், நெல் வயல்களை இழக்க நேரிடும்”‘என்று அச்சம் தெரிவித்தார்.

கோவாவில் முதல் முறையாக 1988-ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிலத்தை குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களது விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி கட்டடங்களை கட்டினர். இதனால் புற்றீசல் போன்று கட்டடங்கள் உருவானது. இதையடுத்து 2005-ம் ஆண்டு மீண்டும் இது போன்று விவசாய நிலங்களை குடியிருப்பு நிலமாக மாற்றும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தின் படி தனியார் நில உரிமையாளர்கள் மனு கொடுத்து தங்களது நிலத்தில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில்தான் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பயனடைந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

தினம் தினம் திருநாளே!

Next Post

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In