Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமைச்சர்கள் ஊழல் வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்கலாமா? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2024
in Default
0
அமைச்சர்கள் ஊழல் வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்கலாமா? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
76
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மறு ஆய்வுக்கு எடுத்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரின் வழக்குகளையும், அதிமுகவில் ஓபிஎஸ், வளர்மதி வழக்குகளையும் மறுஆய்வுக்கு எடுத்து விசாரிக்க ஆரம்பித்தார்.

இறுதி விசாரணை தொடக்கம்

இறுதி விசாரணை தொடக்கம்

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கடந்த ஆண்டு அக்டோபரில் மதுரைக் கிளைக்கு மாற்றலானதால் வழக்கு விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. ஜனவரியில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே திரும்பினார். பிப்ரவரி 5 முதல் 9ஆம் தேதி வரை தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், ஓபிஎஸ், வளர்மதி மீதான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையும், ஐ.பெரியசாமிக்கு வழக்கு பிப்ரவரி 12, 13 தேதிகளிலும், பொன்முடிக்கு வழக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரையும் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

எனினும் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதற்கு தடை கேட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வளர்மதி ஆகியோர் தனித் தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்த உயர்நீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தாமாக முன்வந்து நீதிபதி வழக்குப் பதிவு செய்தார் என்று தெரிவித்து இருந்தார்.

​வழக்கு விசாரணை

​வழக்கு விசாரணை

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை. தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் தரப்பு வாதம்

அமைச்சர் தரப்பு வாதம்

மேலும், “நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என்றால் குறிப்பிட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கிறது. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, அதன் பின்னர்தான் இதுதொடர்பாக அனுமதி கோரி ஒரு கடிதத்தை தலைமை நீதிபதி பார்த்தார் என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்றும் தெரிவிக்கப்பட்டது

​தலைமை நீதிபதி முடிவெக்கலாம்

​தலைமை நீதிபதி முடிவெக்கலாம்

தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்துள்ளார் என்ற உயர் நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே விசாரிக்கலாம், அல்லது வேறு நீதிபதி முன்பு பட்டியலிடலாம் அல்லது நீதிபதி ஆனந்த் வெங்கடேசனே விசாரிக்கலாம்”என்று குறிப்பிட்டனர். வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும்?

அடுத்து என்ன நடக்கும்?

அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வர இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஆனந்த் வெங்கடேசனால் இனி அந்த வழக்குகளை விசாரிக்க முடியாது. தலைமை நீதிபதி இதுகுறித்து முடிவெடுத்த பின்னரே யார் விசாரிப்பது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பெண் இன்ஸ்பெக்டரை அசிங்கப்படுத்திய நபருக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு..

Next Post

சாலை ஓர கற்களுக்கு துணியை போர்த்தி பூஜை செய்து வழிபடும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலை ஓர கற்களுக்கு துணியை போர்த்தி பூஜை செய்து வழிபடும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்

சாலை ஓர கற்களுக்கு துணியை போர்த்தி பூஜை செய்து வழிபடும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In