திருவல்லிக்கேணி தொகுதி, 115 வது வட்டம், இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்தப்பணிகளை மக்களை பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளவும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக விரைந்து முடித்திடவும் அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினார். மேயர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.




