பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பான தனது கருத்துக்கு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் சோபா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கோருவதாகவும், மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறும் மத்திய அமைச்சர் சோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
