Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறது – அமைச்சர் சேகர்பாபு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in Default
1
சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறது – அமைச்சர் சேகர்பாபு
76
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் வாய்கொழுப்பு அதிகம் என்றும், அவர் வரைமுறை இல்லாமல் தலைவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதாகவும், அது விரைவில் அடக்கப்படும் என்றும் எச்சரித்தார்.  அதாவது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி குறித்து கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைதை கண்டித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக அவர் பேசும்போது, கருணாநிதி என்ன இறைத்தூதரா?, புனிதரா? என்றெல்லாம் சரமாரியாக பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு தான் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், ஓசூர் போன்ற மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 350 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது இந்த. பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் எப்போது முடியும்?, எந்த அளவுக்கு பணிகள் முடிந்துள்ளது? என்பது குறித்து நீண்ட நேரம் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ” திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும், எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை. கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாலும், தேனும் ஆறாய் ஓடியதா?. அவரது தலைவரின் கொடநாடு பங்களாவில் காவலரின் உயிரை கூட காப்பாற்ற முடியாத துப்புகெட்ட ஆட்சி நடத்தியவர் சட்டம், ஒழுங்கை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. 

சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார். அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தரையில் உருண்டு புரண்டாலும் சரி, தரையில் தவழ்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்க முடியாது. சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.

Previous Post

விக்கிரவாண்டி தேர்தல்… வாக்காளர்களுக்கு தேங்க்ஸ் சொன்ன ஸ்டாலின்

Next Post

தமிழகம் முழுவதும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்! 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகம் முழுவதும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்! 

தமிழகம் முழுவதும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்! 

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அமைச்சர் சேகர்பாபு சொல்வதைப் பார்த்தால் இவ்வளவு நாள் சீமான் மீதான வழக்குகளை மூடி மறைத்து வைத்திருந்தார்கள். இதுவும் தவறு தானே.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In