Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிராவை உலுக்கிய கொலை! பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2025
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிராவை உலுக்கிய கொலை! பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி., இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்து, கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு நபர்களில், மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட்டும் ஒருவர். இவர் தான் இந்தக் கொலைக்கு மூலகர்த்தாவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜினாமா செய்யக் கோரி அமளியிலும் ஈடுபட்டனர்.

அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பிய இந்தக் கொலை, நேற்று சமூக வலைதளங்களிலும் பெரும் புயலை கிளப்பியது. சந்தோஷ் தேஷ்முக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்த புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இன்னும் இந்த வழக்கில் அரசியல் அனலை கிளப்பியது.

விவகாரம் பெரிய அளவில் பொது தளத்திலும், அரசியல் தளத்திலும் அனலை கிளப்ப, அமைச்சர் தனஞ்சய் முண்டே இன்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “அமைச்சர் தனஞ்சய் முண்டே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவரது ராஜினாமா கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலத்தின் துணை முதலமைச்சருமான அஜித் பவார், “அவர் (தனஞ்சய் முண்டே), அறத்தின் அடிப்படையில் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று இரவு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவரை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தனஞ்சய் முண்டே உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அங்கு இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சிவசேனாவின் தலைவர் ஆதித்ய தாக்ரே, “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதும், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் உறைந்து போனது. இவ்வளவு மோசமான கொடூரத்தை இதுவரை மகாராஷ்டிரா மாநிலம் கண்டதில்லை. இதுபற்றி பல மாதங்களாக அரசுக்குத் தெரிந்திருந்தும், இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஃபட்னாவிஸை எது கட்டிவைத்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர் ஏன் முண்டேவை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு இத்தனை காலம் எடுத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை. கிராமத் தலைவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அது மகாராஷ்டிரா மாநில முகத்தின் மீது விழும் பெரும் அடி. கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் தனஞ்சய் முண்டேவை இணை குற்றவாளியாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில் அமைச்சரின் பெயர் இடம் பெறாத போதும், அவரது ராஜினாமா, அவரின் நெருங்கிய உதவியாளர் இந்தக் கொலை வழக்கில் மூலகர்த்தாவாக செயல்பட்டிருப்பது உள்ளிட்டவை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அமைச்சர் தனஞ்சய் முண்டே முக்கிய பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பீட் மாவட்டத்தில் உள்ள மசாஜோக்கைச் சேர்ந்த மறைந்த சந்தோஷ் தேஷ்முக்கை கொடூரமாகக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஆரம்பம் முதலே எனது கோரிக்கையாக உள்ளது. நேற்று சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

இந்த விவகாரத்தில், விசாரணை நிறைவடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனது அறம் மற்றும் கடந்த சில நாட்களாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அடுத்த சில நாட்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே மருத்துவக் காரணங்களுக்காக நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

March 04, 2025 3:12 PM IST



.

Previous Post

Madurai Weather 4 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.28°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In