Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜயபாஸ்கர் மனநோயாளியாக மாறி இருக்கிறார்- அமைச்சர் ரகுபதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விஜயபாஸ்கர் மனநோயாளியாக மாறி இருக்கிறார்- அமைச்சர் ரகுபதி
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள காந்தி பூங்கா பின்புறம் 1.97 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டடத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று நூலகத்தையும் அறிவு சார் மையத்தையும் பார்வையிட்டனர்.

ஐசியூவில் மருத்துவத்துறை.. கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் பேச்சு..  கொந்தளித்த அதிமுக மாஜி அமைச்சர் | Tamil Nadu health department is in ICU:  former minister ...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமலாக்கதுறையின் செயல்பாட்டை எந்த அளவுக்கு துணிச்சலோடு எதிர் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் துணிச்சலோடு எதிர் கொண்டிருக்கிறார் என்பதை கடந்த ‌ நிகழ்வுகள் எடுத்துக்காட்டும், 

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை அதிகமான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டம். 2016லிருந்து 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு இருக்கு அனுமதி கேட்டால் எந்த ஊருக்கு பரிந்துரை செய்கின்றோமோ அந்த ஊருக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட அப்போது அமைச்சராக இருந்த மாவட்டத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் இன்று ஜனநாயக முறைப்படி ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கூறுகிறார்.

எங்களைப் பொறுத்தவரை அன்று நாங்கள் பட்ட கஷ்டம் இன்று எந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரும் படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் சுதந்திரமாக செயல்பட அனுமதிகளை தந்து அந்த உறுப்பினர்களும் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தான் முக்கியத்துவம் உள்ளதைப் போல் நினைத்துக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த அராஜகத்தை எல்லாம் மறந்துவிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

Governor wants to save ADMK former ministers - Law Minister Raghupathi |  'அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார்' -  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அதேபோல் புதுக்கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் விஜயபாஸ்கர். ஆனால் அந்த மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது 50 மாணவர்கள் சேர்க்கை உடன் நோயாளிகளுக்கும் தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அவர் சென்று பார்த்திருக்கலாம். ஆனால் அவர் பார்ப்பதை தவிர்த்து விட்டு மருத்துவக் கல்லூரி செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கொரோனா காலத்தில் வெறும் அறிவிப்பை மட்டும் செய்துவிட்டு நிதி ஒதுக்கவில்லை, பின்னர் எங்கள் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கி கட்டடத்தைக் கட்டி முடித்து பல் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதிலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனநோயாளியாக மாறி இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரிகிறது. எனவே அவரது பெற்றோரும் மனைவியும் உரிய நடவடிக்கைகளை எடுத்து அவரை மனநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்றார்.

Previous Post

“வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை” – அமைச்சர் தங்கம் தென்னரசு

Next Post

அதிர்ச்சி வீடியோ : கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி..! – உபி-யில் பரபரப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ : கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி..! – உபி-யில் பரபரப்பு.

அதிர்ச்சி வீடியோ : கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி..! - உபி-யில் பரபரப்பு.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    எதிர்க்கட்சியினர் வாய்க்கு வந்தது போல் தான் பேசுவார்கள் ஆனால் அதற்கு ஒரு அமைச்சர் தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In