Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குமரி: “கல்குவாரிகள் உருவாக பொன்னாரும் தளவாய்சுந்தரமும்தான் காரணம்'' – அமைச்சர் மனோதங்கராஜ் ஆவேசம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2025
in அரசியல் செய்திகள்
0
குமரி: “கல்குவாரிகள் உருவாக பொன்னாரும் தளவாய்சுந்தரமும்தான் காரணம்'' – அமைச்சர் மனோதங்கராஜ் ஆவேசம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்துக்கு கடந்த 7-ந் தேதி பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று மாலை அணிவித்தது காமராஜரை அவமதிக்கும் செயல் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். மேலும், காளிமலையில் வழிபாட்டுத்தல விவகாரத்தில் இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்த மனோதங்கராஜ் முயல்வதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்திருந்தார்.

நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

மனோதங்கராஜ் விளக்கம்

இந்தநிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க-வினருக்கு வரலாற்று உண்மையை தெளிவாக கூறுகிறேன். 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் டெல்லியில் தங்கியிருந்த வீட்டை தீயிட்டு கொளுத்திக் கொலை செய்ய முயற்சி செய்தனர் அன்றைய ஜனசங்கமும், ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்புகளும். அந்த சம்பவத்தில் காமராஜர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பசுவதை தடை சட்டத்தை ஏற்காததால் இந்த கொலை முயற்சி நடந்தது.

“மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்” – பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கருப்பு சட்டை

ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க காமராஜரை பயன்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்ததால் நினைவிடம் போராட்ட களமாக மாறியதாக கூறியுள்ளார். காமராஜர் போன்ற எந்த தலைவர்களுடைய நினைவிடங்களில் சில குறிப்பிட்ட நாட்களில் மரியாதை செலுத்த செல்வது சகஜம். காமராஜர் வீட்டை தீயிட்டு கொளுத்திக்ய நாளை கருப்பு நாள் என்று பெரியார் கூறியுள்ளார்.

அதை நினைவுபடுத்தும் விதத்தில் அங்கு சென்றது தவறா? அங்கு எடுக்கப்பட்ட உறுதி ஏற்பானது இந்திய துணை கண்டத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற செயல். அதிலும் தவறு இல்லை. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர் மனோதங்கராஜ்
காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர் மனோதங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத பிரச்சினை, பெரிய தீவிரவாத செயல்கள் இருப்பது போன்று பேசியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

கேரளா- தமிழ்நாடு எல்லையில் இருக்கக்கூடிய மலையில் காளி மலை அம்மன் கோவில் உள்ளது. அதற்கு சிறிது தூரத்தில் குருசுமலை உள்ளது.

காளிமலைக்கு ஏற்கனவே மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் குருசுமலைக்கு மின் இணைப்பு கேட்ட உடனே பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் எதிர்க்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க கட்சி நடுநிலையான எண்ணத்துக்கு வர வேண்டும்.

கல்குவாரிகள்

கல்குவாரிகள் விஷயத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் நாங்கள் ஒரு விவாதத்துக்கு அழைக்கப்போகிறோம். அ.தி.மு.க ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 43 குவாரிகள் இருந்தன.

தி.மு.க ஆட்சியில் அதில் 39 குவாரிகள் மூடப்பட்டு தற்போது 4 மட்டுமே உள்ளன. சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் வனத்தில் இருந்து 10 கி.மீ தொலைவுக்கு கல்குவாரிகள் இருக்கக்கூடாது என்று வழிகாட்டி நெறிமுறைகள் இருந்தது.

அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளகளை சந்தித்தார்
அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளகளை சந்தித்தார்

ஆனால் அதிர்வு தாங்கும் மண்டலத்தை 0 முதல் 3 கி.மீ. என்று அ.தி.மு.க ஆட்சியில் மாற்றினார்கள். இதனால் தான் தற்போது 4 குவாரிகள் உள்ளன. இந்த ஒட்டுமொத்த தவறுக்கும் பொன். ராதாகிருஷ்ணனும், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வும் தான் காரணம். இதை நாங்கள் பொது மேடையில் இவர்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடந்த சோதனையில் விதிகளை மீறிய 182 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே எங்கள் மீது அவதூறு பேசுபவர்கள் மீது வழக்கு தொடர இருக்கிறேன். விளக்க நோட்டீஸ் அனுப்பி விட்டோம். கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக பா.ஜ.க-விடம் நான் மன்னிப்பு கேட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவருக்கு வயதாகிவிட்டதால் இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விஷயத்தில் மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறப்பு திருத்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தை தி.மு.க. மட்டுமே கூறி வருகிறது. அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வி பட்டியலிலேயே இருக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதனால் அவர்கள் அடுத்த தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. அதிலும் தற்போது பா.ஜ.க-வின் மாயவலையில் சிக்கியுள்ளனர். இந்த முறையாவது எடப்பாடி பழனிசாமி நடுநிலையோடு நின்று தமிழ்நாட்டுக்கு வரவிருக்கின்ற ஒரு ஆபத்தைத் தடுப்பதற்கு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வேண்டாம் என்று கூறுவார் என்று நினைத்தோம்.

ஆனால் அதை அவர் கைதட்டி வரவேற்று இருக்கிறார். தேர்தல் கமிஷனரை நியமிக்கும் பொறுப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரை நியமித்து இருக்கிறார்கள். இதனால் ஒருதலைப்பட்சமான நியமனத்திற்கான வாய்ப்பு 100 சதவீதம் இருக்கிறது” என்றார்.

‘மண், மலை, கடல் வளங்கள் அதானிக்கு சொந்தம் என்பதே பாஜக கொள்கை’ – பொன்னாருக்கு மனோ தங்கராஜ் பதிலடி



.

Previous Post

Delhi Red Fort Blast | காஷ்மீர் டூ டெல்லி – 4 முறை முறைகேடு… உண்மையான ஓனர்?… வெடித்த காரின் அதிர்ச்சி பின்னணி! | இந்தியா

Next Post

Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு… காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது – போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு… காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது – போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு... காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது - போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In