2022-23 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஐந்து கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஜூலை 25 அன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 2021-22 உடன் ஒப்பிடும்போது 2022-23 இல் பெயர் நீக்கமானது 247% அதிகரித்துள்ளது.
அமைச்சகம், அதன் பதிலில், இந்த நீக்குதல்கள் மாநில அரசுகளால் நடத்தப்படும் “வழக்கமான பயிற்சி” என்று கூறியுள்ளது. போலி ஜாப் கார்டு, டூப்ளிகேட் ஜாப் கார்டு, வேலை செய்ய விரும்பாதது, கிராம பஞ்சாயத்தில் இருந்து நிரந்தரமாக குடும்பம் மாறியது, வேலை அட்டையில் உள்ள தனி நபர் மற்றும் காலாவதியான நபர் உள்ளிட்ட ஐந்து காரணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்கள் மற்றும் வேலை அட்டைகள் நீக்கப்படுவதற்கு சுமார் 10 காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன –
தவறான வேலை அட்டை,
போலி விண்ணப்பதாரர்,
நகல் விண்ணப்பதாரர்,
குடும்பம் மாற்றப்பட்டது,
நபர் புதிய குடும்பத்திற்கு மாற்றப்பட்டார்,
தனி நபர் வேலை அட்டை
காலாவதியானது,
வேலை செய்ய விரும்பாதவர்,
இறந்த நபர்,
இல்லாத பஞ்சாயத்து மற்றும் கிராமம் நகரமாகியது.

