March 18, 202510:27 AM IST
Tamil Live Breaking News: ஒளவையார் யார்? பேரவையில் ருசீகரம்
பேரவையில் கேள்வி நேரத்தில், வேதாரண்யம் தொகுதி, துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் அறிவு களஞ்சியம் துவக்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் அறிவு களஞ்சியம் துவக்க வருங்காலத்தில் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ஒளவையார் ஒருவர் இல்லை. 5 பேர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் எந்த ஒளவையாரை நீங்கள் சொல்லுகிறீர்கள் என நகைச்சுவையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், 13 கோடியில் அங்கு மணிமண்டபம் கட்டுகிறீர். அதில் புத்தகம் வைத்தால் போதும், அது அறிவுக் களஞ்சியமாகிவிடும். எங்கள் ஊரில் எந்த ஔவையாருக்கு கோவில் உள்ளதோ அந்த ஔவையாருக்கு வேண்டும் என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் “நம்ம வீட்டில் வயதானவர்களை ஆயா என கூப்பிடுவதைப்போல் அப்போது பெண்பால் புலவர் அனவரையும் ஔவையார் என்றிருப்பர் போல.” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “இதுவரையும் ஔவையார் என்றுதான் பேசினோம். தற்போது அவ்வை யார் என்று பேசுகிறோம் என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை” எழுந்தது.
