அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர், “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” எனத் தெரித்தார்.
