Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Metro Train | இந்தியாவில் தண்ணீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்; எந்த ஊரில் தெரியுமா?  | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2025
in அரசியல் செய்திகள்
0
Metro Train | இந்தியாவில் தண்ணீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்; எந்த ஊரில் தெரியுமா?  | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 11, 2025 6:31 PM IST

சுரங்கப்பாதையில் தண்ணீர் ஒருபோதும் நுழையாமல் இருக்க சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, இணைப்புகளில் ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில்மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

ஆறுகள் மற்றும் கடலின் மேல் (ராமேஸ்வரத்தில்) ரயில்கள் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் நீருக்கடியில் ஒரு ரயில் செல்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?  இதை கேட்கும் போதே உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது அல்லவா. ஒருவேளை இந்த ரயிலில் பயணம் செய்யக் கூட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இந்த சாதனை வேறு எங்கோ வெளிநாட்டில் நடைபெறவில்லை. இந்தியாவில், அதுவும் கொல்கத்தாவில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை  வழியாக இந்த ரயில் செல்கிறது.

கொல்கத்தாவில்  உள்ள  ஹூக்ளி ஆற்றின் நீருக்கடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை வழியாக இந்த மெட்ரோ ரயில் செல்கிறது. இந்த சுரங்கப்பாதை ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள எஸ்பிளனேடையும் மேற்குக் கரையில் உள்ள ஹவுரா மைதானத்தையும் இணைக்கிறது. இந்த சுரங்கப்பாதை தரை மட்டத்திலிருந்து தோராயமாக 33 மீட்டர் கீழே உள்ளது. இது 11 மாடி கட்டிடத்திற்கு சமம்.

ஹவுராவிலிருந்து எஸ்பிளனேடு வரையிலான மொத்த தூரம் 4.8 கிலோமீட்டர்கள்  ஆகும்.  இதில் ஆற்றின் அடியில் அரை கிலோமீட்டர் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கடக்க தோராயமாக ஒரு நிமிடம் ஆகிறது. இந்த சுரங்கப்பாதை 120 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை

ஹூக்ளி நதிக்கு அடியில் நீருக்கடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை, நாட்டிலேயே இப்படியொரு முறையில் கட்டப்பட்ட முதல் சுரங்கப்பாதையாகும். இதன் கட்டுமானப் பணிகளின் போது பல சவால்களை எதிர்கொண்டது. மேலிருந்து வரும் நீரின் அழுத்தத்தைத் தாங்குவதற்கும் கட்டுமானத்தின் போது ஆற்று நீர் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கும் பல்வகை திறன் கொண்ட இயந்திரம் தேவைப்பட்டது. நாடு முழுவதும் பல நகரங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டிருந்தாலும், இது நீருக்கடியில் கட்டப்பட வேண்டியிருந்ததால், வழக்கமான டிபிஎம் மூலம் செய்ய முடியாது.

சுரங்கம் தோண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரம்

ஆற்றின் அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான டிபிஎம், ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது மண்ணை வெட்டிச் செல்லும் அதே வேளையில் சுற்றியுள்ள பகுதியையும் மூடுகிறது. ஆகவே தோண்டும் போது தண்ணீர் நுழைந்தாலும், ஏற்கனவே முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை சேதமடையாது.

சுரங்கப்பாதைக்குள்  நுழையாத தண்ணீர்

சுரங்கப்பாதையில் தண்ணீர் ஒருபோதும் நுழையாமல் இருக்க சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, இணைப்புகளில் ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது 10 மடங்கு விரிவடைகின்றன. அதாவது இது முன்பை விட இன்னும் நீர்ப்புகா  வகையில் மாறும். நீருக்கடியில் சுரங்கப்பாதை 520 மீட்டர் நீளமும் 6 மீட்டர் உயரமும் கொண்டது.

இந்த திட்டம் 1971-ம் ஆண்டு மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் எந்த திட்ட வளர்ச்சியும் நடைபெறவில்லை. டெல்லி மெட்ரோவின் வெற்றியைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டு, நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2025-ம் ஆண்டு நிறைவடைந்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Kolkata,West Bengal

First Published :

October 11, 2025 6:31 PM IST



.

Previous Post

Gaza: போர் நிறுத்தம்; சாம்பலாகிப்போன கட்டடங்கள் – காஸாவுக்கு திரும்பும் மக்கள் – கண்ணீர் காட்சிகள்

Next Post

அதிமுக தவெகவுடன் கூட்டணி?; பாஜகவைக் கழற்றி விட்டுவிடுவாரா இபிஎஸ்? – பாஜக நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் | Alliance with vijay TVK?; Will EPS abandon BJP? – BJP leader nainar Nagendran’s answer

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக – அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” – நயினார் நாகேந்திரன்

அதிமுக தவெகவுடன் கூட்டணி?; பாஜகவைக் கழற்றி விட்டுவிடுவாரா இபிஎஸ்? - பாஜக நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் | Alliance with vijay TVK?; Will EPS abandon BJP? - BJP leader nainar Nagendran's answer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In