மருத்துவ அவசர நிலை
தில்லி காற்றுமாசு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அதிஷி பேசியதாவது:
“அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது.
இன்று, ஒட்டுமொத்த வட இந்தியாவும் மருத்துவ அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்லி, சண்டீகர், ஜெய்ப்பூர், போபால், பாட்னா, லக்னெள உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம், மோசம், கடுமை, மிகக் கடுமை பிரிவில் உள்ளன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளது. இன்று, நாட்டு மக்களால் மூச்சுகூட விட முடியவில்லை.
