கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது வைகோவுக்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் விகடனுக்கு மல்லை சத்யா பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் எங்கிருந்து பிரச்னை ஆரம்பமானது என்பது குறித்து பேசியிருக்கிறார்.
நெறியாளர், ``முதல்முறையாக துரை வைகோ அரசியலுக்கு வரும்போது, நீங்கள் உங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டுத் தருகிறேன் என்று சொன்னபோது, `இது வந்து எஸ்.சி அடிப்படையில கொடுக்கப்பட்ட பதவி. அது எப்படி துரை வைகோவுக்கு கொடுக்க முடியும்?’ என வைகோ பேசியதாக வல்லம் பஷீர் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் வைகோ அப்படி பேசினாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“ஆம் இது நடந்தது தான். துரை வைகோ அரசியலுக்கு வரும்போது அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்த போது என்னுடைய துணைப்பொதுசெயலாளர் பதவியைக் கூட கொடுங்கள் என்று நான் வெள்ளந்தியாக சொல்லிவிட்டேன்.
