மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவை மேயர் இன்று துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில்
“பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-2024ல் குறிப்பிடப்பட்டதை செயல்படுத்தும் விதமாக சென்னை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களில் முதற்கட்டமாக 521 மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை முன்னிட்டு, இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுடன் கலந்துரையாடி வழியனுப்பி மகிழ்ந்தோம். இந்நிகழ்வின் போது துணை ஆணையாளர், நிலைக்குழுத் தலைவர், மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.”




