கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.