
Last Updated:
வயது முதிர்வால் ஏற்படும் பாதிப்பு காரணமாக மன்மோகன் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் நினைவிழந்த மன்மோகன் சிங் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு இரவு 8.06 மணியளவில் கொண்டு வரப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணியளவில் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் அவரது உடல்நிலை குறித்த தகவல்களையும் எய்ம்ஸ் வெளியிட்டிருக்கிறது. 92 வயதான மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு இன்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சிகிச்சை தொடர்ந்த நிலையில், மருத்துவர்களால் மன்மோகன் சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
இதையும் படிங்க – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை
மன்மோகன் சிங் மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
With profound grief, we inform the demise of the former Prime Minister of India, Dr Manmohan Singh, aged 92. He was being treated for age-related medical conditions and had a sudden loss of consciousness at home on 26 December 2024. Resuscitative measures were started immediately… pic.twitter.com/ZX9NakKo7Y
— ANI (@ANI) December 26, 2024
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் மறைந்தார் என்ற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வயது முதிர்வால் ஏற்படும் பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் நினைவிழந்த மன்மோகன் சிங் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு இரவு 8.06 மணியளவில் கொண்டு வரப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணியளவில் உயிர் பிரிந்தது. என்று கூறப்பட்டுள்ளது.
December 26, 2024 10:52 PM IST
Manmohan Singh : ‘இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் உயிர் பிரிந்தது’ – மெடிக்கல் ரிப்போர்ட் வெளியிட்டது எய்ம்ஸ் மருத்துவமனை…
