Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Manmohan Singh: “இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்களிப்புகளை செய்தவர் மன்மோகன் சிங்”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 9, 2025
in அரசியல் செய்திகள்
0
Manmohan Singh : மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு ஏன் இன்று நடைபெறவில்லை..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



மன்மோகன் சிங் மறைவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்தவர் மன்மோகன் சிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியதோடு, நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read: Manmohan Singh: நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பி… மன்மோகன் சிங் எனும் ஆளுமை உருவான கதை!

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தின என்றும், திமுக தலைவர் கலைஞர், மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், கூட்டணியும் மிகப்பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தியதையும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமரின் மறைவால், தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசியல்வாதியையும், குறை சொல்ல முடியாத ஒருமைப்பாட்டின் தலைவரையும், ஈடு இணையற்ற பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நேர்மையுடன் வழிநடத்தியவர் மன்மோகன் சிங் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மன்மோகன் சிங்கின் பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்திற்கு உத்வேகம் அளித்ததாகவும், தான் ஒரு வழிகாட்டியை இழந்துவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தன் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக சேவையாற்றுவதில் தொடர் பங்களிப்பை வழங்கியவர் மன்மோகன் சிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read: மன்மோகன் சிங்கின் மூன்று மகள்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?.. முழு விவரம் இதோ!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர். பாலு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங்கின் மறைவு காங்கிரஸுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பேரிழப்பு என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

First Published :

December 27, 2024 6:35 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Manmohan Singh: “இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்களிப்புகளை செய்தவர் மன்மோகன் சிங்” – குடியரசுத் தலைவர் புகழாரம்!



.

Previous Post

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் – நெருக்கடியில் ஸ்டாலின்?

Next Post

இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு தம்பதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு தம்பதி

இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு தம்பதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In