மணிப்பூரில் குக்கி, மெய்தி மக்களுக்கு இடையிலான வன்முறை மீண்டும் உக்கிரமாக வெடித்திருப்பதால் மத்திய அரசு அங்கு கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்பவுள்ளது.
மணிப்பூர் மியான்மருக்கு அருகில் இருப்பதனால் மியான்மர் எல்லையில் உள்ள இந்திய இராணுவ கம்பனிகளின் எண்ணிக்கையை 288ஆக உயர்த்தப்பட்டுள்ளது என இம்பாலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
“நாம் கூடுதலாக 90 கம்பனி படைகளை பெறுகிறோம். இவற்றில் கணிசமான அளவு ஏற்கெனவே இம்பால் வந்து சேர்ந்துள்ளனர்.” எனப் பேசியுள்ளார்.
