கோல்கட்டா: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிதி கிடைக்கவில்லை என மே.வங்க முதல்வர் மம்தா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: டிசம்பர் 17 முதல் 20ம் தேதிக்குள் டில்லி செல்கிறேன். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளேன்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் அதன் பங்கைப் பெற்று கொண்டது எனக் கூறப்படுகிறது. பிறகு ஏன் மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி கிடைக்கவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.

