Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சிக்கு உகந்ததல்ல: மம்தா.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சிக்கு உகந்ததல்ல: மம்தா.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
mamata_banerjee_tnie

மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு  ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை உகந்ததல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைத்தது.

அக்குழுவின் செயலர் நிதின் சந்திராவுக்கு கடிதம் இன்று (வியாழக்கிழமை) மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு இந்த முறை உகந்தது கிடையாது.

இந்த விஷயத்தில் ஆராய்ந்து செயல்படுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடமும், உயர்நிலைக் குழுவிடமும் கோரிக்கை வைக்க உள்ளேன்.

இது எங்களின் குரல் மட்டுமல்ல, இந்தியாவின் குரல் ஆகும். இந்த விவகாரத்தில் நமது மாநிலத்தின் கொள்கை, கூட்டாட்சி அமைப்பு முறை அனைத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

.

Previous Post

ஜன. 31-ல் கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்?

Next Post

சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள்: அதிமுக மீது அண்ணாமலை மறைமுக தாக்கு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள்: அதிமுக மீது அண்ணாமலை மறைமுக தாக்கு..!

சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள்: அதிமுக மீது அண்ணாமலை மறைமுக தாக்கு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In