Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 5, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் 3,088 உயா்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்.25-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதைச் செயல்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், அதன் ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

அவற்றை தொகுத்து அறிக்கையை 10 நாள்களுக்குள் இயக்குநரகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படாதவாறு விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளை 4 முறை நெருங்கிய ராணுவம்… பிடிப்பதில் இருக்கும் சிக்கல் என்ன?

Next Post

“பஹல்காம் தாக்குதலுக்கு பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பஹல்காம் தாக்குதலுக்கு பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

“பஹல்காம் தாக்குதலுக்கு பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In