Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா: சரத் பவார், அஜித் பவார் சந்திப்பு… இணைய விரும்பும் பவார் குடும்பம் – சாத்தியமா?! | Pawar family, party workers want Ajit Pawar, Sharad Pawar to reunite

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா: சரத் பவார், அஜித் பவார் சந்திப்பு… இணைய விரும்பும் பவார் குடும்பம் – சாத்தியமா?! | Pawar family, party workers want Ajit Pawar, Sharad Pawar to reunite
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுனந்தா பவாரின் கருத்து குறித்து அவரது மகன் ரோஹித் பவார் கூறுகையில், “அவரின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு மருமகளாக ஒரு குடும்பம் ஒன்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். நானும் 37 ஆண்டுகளாக இந்த குடும்பம் ஒற்றுமையாக இருந்ததை பார்த்திருக்கிறேன். எனவே இருவரும் ஒன்று சேருவதை குடும்ப உறுப்பினர்கள் விரும்புவது இயற்கைதான்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும் இரு அணிகளும் ஒன்று சேரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அங்குஷ் கூறுகையில்,”சரத்பவாருடன் அஜித்பவார் சந்தித்து பேசிய பிறகு இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் இணைப்பு அல்லது சேருவது குறித்து கட்சி தலைவர்தான் இறுதி முடிவு எடுப்பார்.” என்றார்.

சரத் பவார் மகள் vs அஜித் பவார் மனைவி

சரத் பவார் மகள் vs அஜித் பவார் மனைவி

அஜித்பவார் கட்சியினரும் இதே கருத்தையே வலியுறுத்தி இருக்கின்றனர். இது குறித்து அஜித்பவார் கட்சியின் புனே தலைவர் தீபக் கூறுகையில்,” இரு அணிகள் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கிறது. சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்து பேசிய பிறகு இருவரும் இணையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்”என்று தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. அதற்குள் இரு அணிகளும் இணையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சரத்பவாரை தான் சந்தித்து பேசியது அரசியல் ரீதியான ஒன்று கிடையாது என்றும், குடும்ப சந்திப்பு என்றும் அஜித் பவார் தெரிவித்தார். பா.ஜ.க வும் சரத் பவார் அஜித்பவாருடன் சேர்ந்து தங்களது கூட்டணிக்கும் வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக ஒரும் தகவலும் உள்ளது.

இந்த இணைப்பு சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்..!



.

Previous Post

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

Next Post

Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?

Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In