ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வருவார் என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகைக்கான குறிப்பிட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும், அதற்கான தயாரிப்புகளை ரஷ்யா தொடங்கும்” என்று பெஸ்கோவ் இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார்.

