மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை, தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 45 பேர் கொண்ட இப்பட்டியலில், தமது நெருங்கிய உறவினரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவாரை எதிர்த்து பாராமதி தொகுதியில் களமிறங்குகிறார் யுகேந்திர பவார்.
