மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அரசு நடத்தும் மருத்துவமனையில் மேலும் 7 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.
மேலும் அவுரங்கபாத் மருத்துவமனையில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் இறந்துள்ளதாக புதிய செய்திகள் தெரிய வருகிறது.
இந்த மரணங்கள் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், சம்பவம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறினார். மேலும், மாநில அமைச்சரவை இன்று கூட்டத்தின் மூலம் இறப்புகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் சிவ சேனா கட்சியின் சுகாதார மந்திரியை பதவி விலக கூறியுள்ளனர்
இதற்கிடையில், ஒரு நாள் முன்னதாக, மகாராஷ்டிர பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) சென்றடைய வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் இருந்து தனது ‘ஜாகர் யாத்திரை’யைத் தொடங்கியது. மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தலைமையில், முதல் கட்டமாக விதர்பா பிராந்தியத்தில் உள்ள பதினொரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய பேரணி நடைபெறுகிறது.

