Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: ‘பசுவிற்குத் தாய் அந்தஸ்து’ சிவசேனா-பாஜக கூட்டணி அரசு அறிவிப்பு | 38 decisions taken in maharashtra cabinet meeting for assembly polls

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: ‘பசுவிற்குத் தாய் அந்தஸ்து’ சிவசேனா-பாஜக கூட்டணி அரசு அறிவிப்பு | 38 decisions taken in maharashtra cabinet meeting for assembly polls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மத்தியில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. இதனால், சிவசேனா – பா.ஜ.க., கூட்டணி அரசு அவசர அவசரமாகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் காணொளி காட்சி மூலம் ரூ.11200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை அவசரமாகக் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் 38 முடிவுகள் எடுக்கப்பட்டன. அதோடு இதில் பசு மாட்டைத் தாயாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, ராஜமாதாவாக அறிவிக்கப்பட்டது. இதிகாசக் காலங்களிலிருந்து பசுவைப் புனிதமாகக் கருதுவதாலும், கிருஷ்ணருக்குப் பசு நெருக்கமானது என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பசுவின் பால், சாணம், கோமியம் போன்ற அனைத்துமே பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்திலும் பசு ஒன்றி இருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு பசுவை மகாராஷ்டிராவின் ராஜமாதாவாக அறிவித்து முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், “நாட்டுப் பசுமாடுகள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் அதற்குத் தாய் அந்தஸ்து கொடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. கோஷாலாக்களில் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்றார். நாட்டில் முதல் முறையாக உத்தரகாண்ட மாநிலம் பசுவிற்குத் தாய் அந்தஸ்து வழங்கியது.



.

Previous Post

வைரலாகும் மூ டெங் மீம் நாணயத்துடன் வெறும் 17 நாட்களில் ரூ .1 லட்சத்தை ரூ .100 கோடியாக மாற்றிய நபர்!-man turns rs 1 lakh into rs 100 crore in just 17 days with viral moo deng meme coin

Next Post

10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி புதிய சாதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி புதிய சாதனை!

10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி புதிய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In