வளர் இளம் பருவத்தவர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது குற்றமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம் பெண் அளித்த புகாரில் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் உத்தரவு
கட்டி பிடித்து முத்தம் கொடுத்த பிறகு, திருமணம் செய்ய மறுத்து விட்டார் என காதலன் மீது காதலி கொடுத்த புகாரில் குற்றபத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் காதலித்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை அறியாமல் காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட இளைஞர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது, காதலர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், புகார் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதால், மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தார்.

நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். காதல் செய்தால் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. அப்படி பழகும் போது தான் அந்த பெண்ணைப் பற்றிய முழு விவரமும் கிடைக்கும். அந்தப் பெண்ணின் நடத்தை தரமற்றதாக இருப்பின் லவ் பண்ணி விட்டோம் என்பதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்த கூடாது. அந்தப் பெண்ணின் நடத்தையோ அல்லது ஆணின் நடத்தையோ சரி இல்லை என்றால் அதாவது நமக்கு ஒத்து வராது என்று தெரிந்தால் இருவரில் எவர் வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் தவறில்லை. மொத்தத்தில் லவ் செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் வெத்து வேட்டுகளாகவும் குப்பைகளாகவும் தான் இருக்கின்றனர். முக்கியமாக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி படிக்கும் அல்லது தங்கி வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலானோர் அதாவது மிகவும் பெரும்பாலானோர் தரமற்றவர்கள். சென்னையில் தங்கி படித்த அல்லது தங்கி வேலை செய்த பெண்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்