தாய் கண்முன்னே குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: மாதவரம் நேருநகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீட்டின் 3 ஆவது மாடியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல்- பூஜா. பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த ஆறு மாதம் முன்பு சென்னைக்கு வேலை காரணமாக வந்தனர். இவர்களுக்கு பருண், சியோன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ( ஜூலை 6) மதியம் பூஜா வீட்டின் மாடியில் துணிகளை துவைக்க சென்று இருந்தார். அப்போது தன்னுடைய இரண்டு குழந்தைககள் பருண், சியோன் அகியோரையும் உடன் அழைத்து சென்றார்.
அவர்களை அருகில் தரையில் வைத்து விளையாட வைத்தார். அப்போது மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளி வழியாக 2 ஆவது குழந்தை சியோன் வெளியே எட்டிப்பார்த்து கொண்டது.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை சியோன் 3 ஆவது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தது. இதனை கண்டு தாய் பூஜா அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். குழந்தை சியோன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தை சியோனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கண்முன்னே குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

