திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் மாதவன் இணைந்துள்ளார்.
யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் – திருச்சிற்றம்பலம். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, உதய் மகேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
