Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கண்ணாடியில பாருங்க.. கார்ல யார் தெரியுதா? எடப்பாடியின் காஸ்ட்லி வண்டிக்கு இதான் காரணமா? வாவ் ஸ்பெஷல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள்
0
கண்ணாடியில பாருங்க.. கார்ல யார் தெரியுதா? எடப்பாடியின் காஸ்ட்லி வண்டிக்கு இதான் காரணமா? வாவ் ஸ்பெஷல்
127
SHARES
205
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Hemavandhana
Published: Wednesday, July 5, 2023, 11:31 [IST]
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்கியுள்ள புதிய வாகனம்தான், பலரது கவனத்தையும் இன்னமும் ஈர்த்து வருகிறது. அதைவிட முக்கியமாக, எதற்காக இந்த வாகனத்தை எடப்பாடி வாங்கியிருக்கிறார் என்ற காரணமும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது. இத்தனை நாட்களும் இல்லாத வகையில், புது வாகனத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.. force நிறுவனத்தின் urbania வகை வாகனத்தை எடப்பாடி பழனிசாமி வாங்கி உள்ளார்.. இந்த காஸ்ட்லி காரில்தான் குளுகுளுவென வலம் வருகிறார் எடப்பாடி.. திடீரென இந்த காலில் ஏன் அவர் வருகிறார் என்ற சந்தேகம் வட்டமடித்தே வருகிறது.. சுற்றுப்பயணம்: வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரச்சாரத்திற்காக பிரத்தியேகமான புதிய இந்த வாகனம் வாங்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், இந்த கார் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதாலும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாலும், பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. காலில் ஆபரேஷன்: அதுமட்டுமல்ல, இந்த கார் வாங்கியதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.. நீண்ட நேரமாக அவரால் ஒரே இடத்தில் நிற்க முடியாத நிலைமை இருப்பதால்தான், சேலத்திலேயே அவர் 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ஓய்வு எடுக்கும்படி ஆகிவிட்டது.. சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்க்ககூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாத நிலைமை அப்போது இருந்தது. ஸ்பெஷாலிட்டி: அதனாலேயே இந்த புதிய வாகனத்தை வாங்கியிருக்கிறாராம். இந்த காரை பொறுத்தவரை உள்ள ஸ்பெஷலாட்டி என்னவென்றால், ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பானியா வகை வாகனம் மிகவும் விலை உயர்ந்தது என்கிறார்கள்.. இதில் உயரமான இருக்கைகள் இருக்குமாம்.. இந்தியாவில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் டிரைவர் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் உட்காருபவர்களுக்கும் ஏர்பேக் வசதி இதில் இருக்கிறதாம்.. அதேபோல சீட்டில் உட்காருபவர்களுக்கு ஸ்பெஷலான ஏசி வெண்டிலென்ட்டும் இதில் அமைக்கப்பட்டிருக்குமாம். இந்தியாவில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் டிரைவர் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் உட்காருபவர்களுக்கும் ஏர்பேக் வசதி இதில் இருக்கிறது.. மேலும், சீட்டில் உட்காருபவர்களுக்கு ஸ்பெஷலான ஏசி வெண்டிலென்ட்டும் இதில் அமைக்கப்பட்டிருக்கும்.. முன்பக்கம் உட்காரும் இருக்கையும் சற்று உயரமாக இருக்கிறது.. 2 பக்கமும் பாதுகாப்பு படையினர் நின்றுகொண்டு செல்லும் வசதிகளும் இதில் இருக்கிறது. குறுகிய இடம்: வழக்கமாக, நீண்ட பயணங்களுக்கு எப்போதும் இன்னோவா மற்றும் டெம்போ டிராவலரை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வந்தார். ஆனால், அந்த கார்களில் கால் வைக்க குறுகிய இடம் மட்டுமே இருக்கிறது.. அதனாலேயே புதிய வகை காருக்கு அவர் மாற திட்டமிட்டதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பயணங்களின்போது காரினுள்ளே அவர் உட்கார்ந்திருப்பது, வெளியே நிற்கும் மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அவ்வளவாக தெரியவில்லை என்று கூறிவந்துள்ளார்கள். புதிய வாகனத்தை வாங்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அதிமுகவினர். இப்போது எங்கு சென்றாலும் இந்த காரில்தான் செல்கிறார்.. இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம்வருகின்றன.. அந்த காரில் எடப்பாடி முன்சீட்டில் உட்கார்ந்திருப்பதை தெளிவாக பளிச்சென காண முடிகிறது.. ஆக, உடல்ரீதியான தொந்தரவுகள் இருப்பதாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இருப்பதாலும்தான், இந்த வாகனத்தை எடப்பாடி பழனிசாமி வாங்கியதாக சொல்கிறார்கள்.. ஆனால், செல்லூர் ராஜூ மட்டும், இதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை சொல்லி உள்ளார். செல்லூர ராஜு: ஏன் திடீர்னு எடப்பாடி பழனிசாமி, புது கார் வாங்கியிருக்கிறார்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, “வேகம் வேகமாக போய் மக்களை சந்திக்க வேண்டும் என்பதால், இப்படி ஒரு கார் வாங்கியிருக்கிறார்.. ஏன்னா, எடப்பாடி பழனிசாமி வல்லவனுக்கு வல்லவன்” என்று ஒரே போடாக போட்டு, அங்கிருந்த மொத்த செய்தியாளர்களையும் வழக்கம்போல் மிரள செய்துவிட்டார் செல்லூர் ராஜூ.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
First Costly car and do you know why edappadi palanisamy changes his car to new car
Story first published: Wednesday, July 5, 2023, 11:31 [IST]

.

Previous Post

“பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல!” – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

இனி லைசன்ஸ் வாங்க 8 போட தேவையில்லை – வருகிறது புதிய ரூல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனி லைசன்ஸ் வாங்க 8 போட தேவையில்லை – வருகிறது புதிய ரூல்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட தேவையில்லை - வருகிறது புதிய ரூல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In