Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லோக்சபா தேர்தல் வியூகம்.. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி பரபர ஆலோசனை.. யாருடன் கூட்டணி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லோக்சபா தேர்தல் வியூகம்.. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி பரபர ஆலோசனை.. யாருடன் கூட்டணி
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edappadi Palanisamy convenes AIADMK district secretaries meeting

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பூத் கமிட்டிகளின் பணிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பூத் கமிட்டி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டு காலமாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே அதிகார போட்டி தொடர்பான வழக்குகள் நடந்து வந்தது. கட்சியை முழுவதுமாக தன்வசப்படுத்தி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூகம் குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவரும் முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

காங்கிரசின் வாக்குறுதிகளை யாரும் நம்ப மாட்டார்கள்: நட்டா

Next Post

என்னாது தமிழகத்தில் புதிய கட்சி உதயமா? – யார் இது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
என்னாது தமிழகத்தில் புதிய கட்சி உதயமா? – யார் இது?

என்னாது தமிழகத்தில் புதிய கட்சி உதயமா? - யார் இது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In