Last Updated:
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றம் குழு அமைத்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டபோது, கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்ற குழு பரிந்துரை அளித்திருப்பதாகவும், இதை நிறைவேற்ற 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணீந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அடங்கிய விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி நீதிபதியை பதவி நீக்கும் செயல்முறை தொடங்குவதாகவும் ஓம் பிர்லா தெரிவித்தார்.
August 12, 2025 6:50 PM IST
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம் ஏற்பு! விசாரணைக் குழு அமைத்த மக்களவை சபாநாயகர்


