புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அக்கட்சியின் மணீஷ்சிசோடியா, சஞ்சய் சிங் ,நீதிமன்ற காவலை ஜன.20 வரை ஒத்திவைக்கப்பட்டது.
டில்லியில் ஆம் ஆத்மி அரசு 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தது. இதில் பல கோடி அரசு க்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சஞ்சய்சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதில் நடந்த பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட துணை முதல்வர் மணீஷ்சிசோடியா, அமைச்சர் சஞ்சய்சிங் ஆகியோர் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது.
இன்று கோர்ட்டில் ஆஜராகினர். சிறப்பு நீதிபதி எம்.கே.நக்பால் இருவரையும் ஜன. 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

