லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும், பிற பகுதிகளிலும் வாக்கி டாக்கிகள் மற்றும் சோலார் கருவிகள் விடித்துச் சிதறியுள்ளன.
பேஜர்கள் வெடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கருவிகள் வெடிப்பில் 450 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனான் சுகாதாரத்துறைத் தெரிவித்திருக்கிறது.
லெபனான் – இஸ்ரேல் மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. கருவிகள் வெடித்ததில் ராணுவத்தினர் மட்டுமல்லாமல் லெபனான் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோஅவ் கேலட், “நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம் – அதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை.” எனப் பேசியிருக்கிறார். ஆனால் பேஜர் வெடிப்புக் குறித்து எதுவும் பேசவில்லை.
