பிரதமர் நரேந்திர மோடியும் ராஜீவ் காந்தியை நினைவு கூர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும் ராஜீவ் காந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
