ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் ஒரு பகுதியினர் திங்கள்கிழமை திருச்சி நகரில் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் பி.வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்:
பாரதீய நியாய சன்ஹிதா 2023
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023
மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023
ஆகியவை இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றியுள்ளன.
புதிய சட்டங்கள் பாராளுமன்றத்திலோ அல்லது சட்டத்துறையினரோடனோ எவ்வித விவாதமும் இன்றி அமுலுக்கு வந்துள்ளதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
