இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் பார்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வர வேண்டாம் என மனு அளித்தனர்.
இராமநாதபுரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மனு அளித்திருந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பது . கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள், தமிழ்நாடு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் சீர்மரபினருக்கான இட ஓதுக்கீட்டில் 20% சதவீதத்தில் ஒரு குறிபிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டார்.
மேற்கண்ட அரசாணையால் மிகவும் பிற்படுத்தபட்ட 118 சாதிகளும் சீர்மரபினர் சாதிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர்.மேற்படி 68 அரசாணையினால் முக்குலத்தோரில் கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தினர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேற்கண்ட அரசாணையினை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இரத்து செய்தது. இந்நிலையில் வருகின்ற 30.10.2023-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சியில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். மேற்படி நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேற்கண்ட அரசாணையினால் பாதிப்படைந்த முக்குலத்தோர் அவ்வரசாணையினை வெளியிட்ட சமுதாய மக்களுக்கும் எடப்பாடி திரு.பழனிச்சாமி தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வர வாய்ப்புள்ளது,
ஆகவே அமைதியான முறையில் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை நடைபெற மேற்படி எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் 30.10.2023-ம் தேதியன்று அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதி அளிக்காமல் சட்டம் -ஒழுங்கினை பாதுகாத்து அமைதியான முறையில் குருபூஜை நடத்தி தருமாறு தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம். என்று மனுவில் கூறியிருந்தனர்


எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வருவதற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குற்றச்செயல் ஆகும் இவர் வரணும் இவர் வரக்கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் பொதுமக்களுக்கு கிடையாது அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிடையவே கிடையாது வந்தமா படித்தோமா போனமா என்று இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறார்கள் அப்படி இரு தரப்புக்கு மோதிரம் வந்தால் அதை தடுக்கும் வேலையை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் இவர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை இவர்களுக்கு எதிரான அரசாணை என்றால் அதை உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ரத்து செய்து விட்டது என்று இவர்களே சொல்கிறார்கள் எனவே அந்த அரசாணை பற்றியோ ஈபிஎஸ் வந்து செல்வதையோ இரு தரப்பு மோதல்களையோ பற்றி இந்த மாணவர்கள் சிந்திக்க வேண்டிய வேலையை கிடையாது
அப்போ மோதல் நடக்கட்டும் என்கிறீர்களா? அப்படி என்றால் அந்த மோதலுக்கு நீங்கள் தான் காரணமா?
எதை வைத்து இவர்களுக்கு மொதலைப் பற்றி பேச தகுதி இல்லை என்கிறீர்கள்?
மோதல் ஏற்படும் என்று அறிந்துகொண்டாள் அதை முறையாக காவல் துறையிடமோ, உயர் அரசு அதிகாரிகளிடமோ தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு நல்ல குடிமகனின் கடமை.
தங்கள் பதிவிலிருந்து தாங்கள் எப்படி பட்ட நபர் என்பது நன்கு புலப்படுகிறது.
bleddy rascal .