Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்பேத்கரை இழிவுபடுத்திய லாலு பிரசாத்..? – விளக்கம் கேட்டு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2025
in அரசியல் செய்திகள்
0
அம்பேத்கரை இழிவுபடுத்திய லாலு பிரசாத்..? – விளக்கம் கேட்டு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 16, 2025 5:58 PM IST

அம்பேத்கரை அவமதித்ததாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீகார் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி 15 நாளில் விளக்கம் கேட்டுள்ளது.

News18News18
News18

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் அம்மாநில முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த நோட்டீஸுக்கு 15 நாளுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஆர்.ஜெ.டி. கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 11ஆம் தேதி தனது 77வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக கடந்த 11ஆம் தேதி அவரை வாழ்த்தவும், அவரிடம் ஆசி வாங்கவும் அவரது கட்சி தொண்டர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது லாலு பிரசாத், நாற்காலியில் அமர்ந்தபடி, தனது கால்களை சோஃபா மீது நீட்டியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லி பரிசளிக்க அங்கு சென்ற நிர்வாகி ஒருவர் அம்பேத்கர் படத்தையும் கையில் எடுத்துச் சென்றிருந்தார். அப்படி எடுத்துச் சென்ற படத்தை நிர்வாகி லாலுவின் காலின் அருகே வைத்துள்ளார். பின்னர் லாலுவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து மாநில பட்டியலின சமூக ஆணையம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பீகார் மாநில துணை முதலமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான சாம்ராத் சௌத்ரி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், “தலித்களுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் ஆணையம் புறக்கணித்துள்ளது. ஆனால் பாஜகவை எதிர்ப்பதால், நாங்கள் மிரட்டல் தந்திரங்களுக்கு ஆளாகிறோம்.

கடிதத்தில் பல இலக்கணப் பிழைகள் உள்ளன. திருத்தங்களுக்காக கடிதம் இரண்டு முறை திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் அறிந்தோம். ஆணையம் வரைவு எழுதி முடித்து முறையாக அனுப்பியவுடன் நாங்கள் தகுந்த முறையில் பதிலளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 16, 2025 5:58 PM IST



.

Previous Post

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

Next Post

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக முடிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In