-
ராமதாஸ் இருக்கையின்கீழ் ஒட்டுக்கேட்பு கருவி
-
அனுமதி பெறாத பொதுக்குழுவில் தனி இருக்கையில் துண்டு
-
அனுமதியை மீறி, `உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற கபட நாடக நடைபயணம்
-
பெயர், புகைப்படம் விவகாரத்தில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவது
-
பாமக தலைமை அலுவலகத்தை நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது
-
பசுமைத் தாயகம் அமைப்பைக் கைப்பற்றியது
-
மக்கள் தொலைக்காட்சி அபகரிப்பு
-
ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாகச் சொன்னது
-
ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை என்று கேலி செய்தது
இந்தப் பொதுக்குழுவில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸே தேர்வு செய்யப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.
அதுமட்டுமின்றி, ராமதாஸை அன்புமணி அவமதித்து விட்டதாக பொதுக்குழுவில் குற்றச்சாட்டுகளும், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மற்றும் If you’re Bad, I’m your Dad என்ற பதாகைகளையும் கட்சித் தொண்டர்கள் ஏந்தியிருந்தனர்.
