பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் – சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 17 காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
மறுவழித்தடத்தில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.
