பிரிஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்கான புளூ கார்னர் நோட்டீஸையும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், பிரிஜ்வல் ரேவண்ணா வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க – ஜே.டி.எஸ் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜே.டி.எஸ் தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி,“எனக்கும் என் சகோதரர் எச்.டி.ரேவண்ணா குடும்பத்துக்கிடையே எந்த தொடர்பும் இல்லை. குடும்ப விழா நிகழ்வுகளில் மட்டும் ஒன்றாக கலந்துகொள்வோம். மற்றபடி பெரிதாக எங்களுக்குள் தொடர்பில்லை.

அவரவர் வேலைகளை தனித் தனியே பார்த்துகொள்வோம். பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுங்கள். தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயம்… மாநில அரசின் விசாரணைக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா திரும்பி நமது குடும்பத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். நீங்கள் இந்த சூழலை எதிர்க்கொள்ளத்தான் வேண்டும். கர்நாடக அரசு எங்கள் குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்கிறது. என் மீது அவதூறு பரப்ப வேண்டும் எனத் தேவேந்திர கௌடாவிடம், டி.கே.சிவக்குமார் பேரம் பேசியிருக்கிறார். அதற்கு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்..

கமெண்ட் செய்ய விரும்பவில்லை