இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளின் உதவியுடன் ஏவப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள இடத்தில் இருந்து வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ’ரோகிணி’ என்ற சிறிய வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ திட்டமிட்டபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது.
