Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என். நேரு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
’தெனாலி’யின் பயப் பட்டியலை விட இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என். நேரு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


’தெனாலி’யின் பயப் பட்டியலை விட எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

 பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பழனிசாமி பாஜகவின் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்!

இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் ‘எல்லாம் பயம் மயம்’ எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.

புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களே

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.

அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.

முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.

முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.



.

Previous Post

ரூ.100-க்குள் இன்றைய இன்ட்ராடே பங்குகள்.. நிபுணர்கள் பரிந்துரைத்த 6 ஷேர்ஸ் லிஸ்ட் இதோ

Next Post

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது!’ கலாய்த்து தள்ளும் கே.என்.நேரு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது!’ கலாய்த்து தள்ளும் கே.என்.நேரு!

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது!’ கலாய்த்து தள்ளும் கே.என்.நேரு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In