Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

`அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்’- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2023
in ஹாட்ஸ்டார்
0
KL Rahul: `அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்'- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ;விளக்கமளித்த மனைவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல், லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். கடந்த மே 1 ஆம் தேதியன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் போது, கே.எல். ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும், அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்தார். கடந்த 9 ஆம் தேதியன்று இவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என கே.எல்.ராகுல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில், லண்டனில் ஓய்வு பெற்று வருகின்றார்.

கே.எல்.ராகுல்

இந்நிலையில், லண்டனில் உள்ள இரவு நேர கிளப் நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலகி வருகின்றது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், கே.எல்.ராகுலின் மனைவியான அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி பதிவிட்டுள்ள அதியா ஷெட்டி, “பொதுவாகவே நான், எதற்கும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் சில சமயங்களில், உங்களுக்காக நிற்பது முக்கியம். ராகுலும் நானும், நண்பர்களுடன் ஒரு வழக்கமான இடத்திற்கு வெளியே சென்றோம். இது போன்ற விஷயங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். புகாரளிக்கும் முன் உண்மையைச் சரிபார்க்கவும். Peace and Love.” என விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி, பாலிவுட் நடிகையும் தனது காதலியுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்தார், கே.எல்.ராகுல். இவர்கள் கடந்த 5 வருடங்களாக காதலித்து நிலையில், பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். 

.

Tags: Rahul
Previous Post

“அதிகாரிகள் மீது தாக்குதல்… பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?” – இபிஎஸ்

Next Post

ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008 ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008 ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008 ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In