என்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. எனது மைக் அணைக்கப்பட்டது. இது எனது சிறப்புரிமையை மீறுவதாகும். இது எனக்கு அவமானம். என் சுயமரியாதை புண்படுத்தி விட்டது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் சபை நடத்தப்பட்டால், அது ஜனநாயகம் அல்ல என்பதை நான் உணர்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் திரு.கார்கே இன்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
அதற்க்கு பதிலளித்த சபாநாயகர், கார்கே அவர்களின் கருத்துக்கள் எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்றார். இது எதிர் கட்சிகளை மேலும் குழப்பமடைய செய்தது.
கார்கே அவர்களின் மைக் அணைக்கப்பது குறித்து திரு.திருச்சி சிவா அவர்களும் இன்று பாராளுமன்றத்தில் கார்கே அவர்களுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் தனது உரையில் தெரிவித்தார்.


