Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கேரளா ஒரு மினி பாகிஸ்தான்; ராகுலுக்குத் தீவிரவாதிகள் வாக்களித்தனர்…” – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு | Maharashtra Minister Rane’s controversial speech Terrorists voted for Rahul Gandhi, Priyanka Gandhi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 30, 2024
in அரசியல் செய்திகள்
0
“கேரளா ஒரு மினி பாகிஸ்தான்; ராகுலுக்குத் தீவிரவாதிகள் வாக்களித்தனர்…” – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு | Maharashtra Minister Rane’s controversial speech Terrorists voted for Rahul Gandhi, Priyanka Gandhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.கவைச் சேர்ந்த நிதேஷ் ரானே. முதல் முறையாக அமைச்சராகி இருக்கும் நிதேஷ் ரானே சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனான நிதேஷ் ரானே, புனே அருகில் உள்ள சஸ்வாட் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அப்சல் கானை சத்ரபதி சிவாஜி மகாராஜ் தோற்கடித்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் நிதேஷ் ரானே கலந்து கொண்டு பேசுகையில், “கேரளாவைச் சேர்ந்த இந்து ஆர்வலர்கள் 12 ஆயிரம் இந்துப் பெண்களைப் பாதுகாத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

நிதேஷ் ரானே

நிதேஷ் ரானே

கேரளா ஒரு மினி பாகிஸ்தான். அதனால் தான் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து தீவிரவாதிகளும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். தீவிரவாதிகளின் ஆதரவால்தான் இவர்கள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற மத விழாக்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் இந்து மதத்திற்கும் கொடுக்கப்படவேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பாக யாரேனும் ஒருவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு தொலைப்பேசி அழைப்பு மூலம் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கும். இந்துத்துவா தொண்டர்கள் தனியாட்கள் கிடையாது. அவர்களுடன் அரசாங்கமாகிய நாங்கள் இருக்கிறோம்.

மகாராஷ்டிராவில் இந்துத்துவா முதல்வர் இருக்கிறார். எனவே நீங்கள் (இந்து ஆர்வலர்கள்) கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்”‘ என்றார்.

நிதேஷ் ரானேயின் செயல்பாடு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதுல் லோண்டே, வெறுப்பையும் ஆதாரமற்ற தகவலையும் பரப்புகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.



.

Previous Post

கொச்சி to மூணாறு வெறும் 25 நிமிடங்களில் – கேரளாவின் ‘சீ பிளேன்’ பற்றி தெரியுமா? | Kochi to vagamon in just 25 minutes – Kerala takes tourism to another level via seaplane

Next Post

2024 – பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2024 – பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In