திருவனந்தபுரம்: ” யாருக்காவது குழப்பம் ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்தை அணுகினால் குழப்பம் நீங்கும்” என தன் மீதான வழக்கு குறித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது நிருபர்கள் சந்திப்பில் பதில் அளித்தார்.
கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் ஆரிப் முகமது கான் காலம் தாழ்த்தி வருகிறார். இது, மக்களின் அடிப்படை உரிமையை சிதைக்கும் செயல்.இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ” யாருக்காவது மனதில் குழப்பம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். அது வரவேற்கப்பட வேண்டும். அப்போது தான் மனதில் உள்ள குழப்பம் நீங்கும்” என கேரள கவர்னர் ஆரிப் முகமது பதில் அளித்துள்ளார்.

