Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா இடைத்தேர்தல்… ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் அபார வெற்றி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2025
in அரசியல் செய்திகள்
0
கேரளா இடைத்தேர்தல்… ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் அபார வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 23, 2025 2:48 PM IST

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற ஐந்து சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும், மற்ற நான்கு இடங்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

News18News18
News18

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநிலத்தின் நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.

குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அதில், கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதான் செளதக் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

கேரளாவில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில் இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 49 ஆயிரத்து 755 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி பாஜக எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதேபோன்று விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், குஜராத் காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்தர் குமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். விஸாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 10 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 23, 2025 2:48 PM IST



.

Previous Post

"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!

Next Post

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In