Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளம் ஐயப்ப சங்கமம் மாநாடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் தேவசம்போட்டுகள் குறித்து பேச்சு | Kerala Ayyappa Sangam Conference; Kerala Chief Minister Pinarayi Vijayan speaks on Devaswom boards

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
கேரளம் ஐயப்ப சங்கமம் மாநாடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் தேவசம்போட்டுகள் குறித்து பேச்சு | Kerala Ayyappa Sangam Conference; Kerala Chief Minister Pinarayi Vijayan speaks on Devaswom boards
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலத்தில் சபரிமலை உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கப்பட்டு 75-வது ஆண்டை முன்னிட்டு பம்பாவில் ஐயப்ப சங்கமம் மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் மேடையில் வாசித்தார். தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டைத் தொடங்கி வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “சபரிமலைக்குத் தனித்துவமான வரலாறு உண்டு. சபரி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த தபஸ்வினி இங்கு சீதையைத் தேடிவந்த ராமனுக்காகக் காத்திருந்தார். அதனால்தான் இந்த இடத்துக்கு சபரிமலை எனப் பெயர் வந்தது. அனைவரும் பேதமின்றி வருகை தரும் இந்தத் தலத்தை வலுப்படுத்த வேண்டும்.

முன்பு கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள்தான் சபரிமலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்தார்கள். பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டமாக இங்கு வந்தார்கள்.

இப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பல சமயங்களில் பக்தர்கள் கடல் போன்று இங்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகத்தான் திருவிதாங்கூர் தேவசம் கோடு சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

பம்பாவில் நடந்த ஐயப்ப சங்கமம் மாநாட்டை தொடங்கிவைத்த முதல்வர் பினராயி விஜயன்

பம்பாவில் நடந்த ஐயப்ப சங்கமம் மாநாட்டை தொடங்கிவைத்த முதல்வர் பினராயி விஜயன்

சிலர் இந்த மாநாட்டை முடக்க முயன்றனர். சுப்ரீம் கோர்ட் அந்த நடவடிக்கைகளை நிராகரித்தது. உண்மையான பக்தர்களைக் கண்டறிவது மிக எளிதானது. பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் 13 முதல் 20 வரையிலான எட்டு ஸ்லோகங்களில் பக்தர்களின் பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.



.

Previous Post

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணை நிலவரம்! mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In